புதுச்சேரியில் என் ஆர் காங்கிரஸ் கட்சி
தலைவரும் முன்னாள் முதல்வருமான ரங்கசாமி பிறந்த நாளையொட்டி என் ஆர் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் புதுச்சேரி முழுவதும் கொண்டாடி வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக
பிரசித்தி பெற்ற ஸ்ரீ மணக்குள விநாயகர் ஆலயத்தில் என் ஆர் காங்கிரஸ் கட்சி
செயலாளர் சட்டமன்ற உறுப்பினருமான ஜெயபால் மற்றும் பொது செயலாளர் பாலன் தலைமையில்
தங்கத் தேர் இழுத்து சிறப்பு வழிபாடு செய்தனர்.
நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர்
ராஜவேல் முன்னால் சட்டமன்ற உறுப்பினர்கள், என் ஆர் காங்கிரஸ் கட்சியின் மாநில
நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர் அதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானமும்
வழங்கப்பட்டது
இதேபோல் வாழும் காமராஜர் என எல்லோராலும்
அன்போடு அழைக்கப்படும் மக்கள் முதல்வர் ரங்கசாமி ஐயா அவர்களின் பிறந்தநாளை என் ஆர்
காங்கிரஸ் பிரமுகர்கள் தங்களின் குடும்ப விழா கொண்டாடி மகிழ்ந்தனர் மேலும்
விழாவையொட்டி ஆயிரக்கணக்கான பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் அன்னதானம் மற்றும்
கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் ஆகியவை நடைபெற்றன அதன் ஒரு பகுதியாக
மண்ணாடிப்பட்டு சட்டமன்றத் தொகுதி என் ஆர் காங்கிரஸ் சார்பில் மக்கள் முதல்வரின்
பிறந்த நாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது மேலும் இதனையொட்டி ஆயிரம் பேருக்கு
அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது அதன்படி காட்டேரிக்குப்பம் கடைவீதி அருகே
நடைபெற்ற விழாவிற்கு தலைமை ஏற்ற என் ஆர் காங்கிரஸ் பிரமுகர் கந்தன்
நாராயணசாமி மக்களுக்கு அன்னதானம்
வழங்கும் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார் மேலும் நிகழ்ச்சியில் என் ஆர் காங்கிரஸ்
பிரமுகர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்


No comments:
Post a Comment