புதுச்சேரி,
ஜீவானந்தபுரம் பகுதியை சேர்ந்த ஆறுமுகம்(25)
என்ற வாலிபர் கடந்த 6மாதங்களுக்கு முன்பு அருண் என்பவரை
கொலை செய்த வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளிவந்திருந்தார். இந்நிலையில் கடந்த
2 ஆம்
தேதி இரவு குறிஞ்சி நகர் பகுதியில் இருசக்கர வாகனத்தில் தனியாக சென்று
கொண்டிருந்தபோது ஆறுமுகத்தை பின் தொடர்ந்து வந்த 8பேர் கொண்ட மர்ம கும்பல் மறைத்து வைத்திருந்த ஆயுதங்களை கொண்டு
சராமாரியாக ஆறுமுகத்தை வெட்டி கொலை செய்துவிட்டு தப்பியோடினர். இக்கொலை சம்பவம்
குறித்து லாஸ்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பியோடி கும்பலை தேடி
வந்திருந்த நிலையில் அருண் கொலைக்கு பழிக்கு பழிவாங்க அருணின் ஆதரவாளர்கள்
ஆறுமுகத்தை வெட்டி கொலை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து தமிழக பகுதியான
மொரட்டாண்டியில் மறைந்திருந்த விக்கி,அக்ஷய்,
சுரேஷ், சக்தி, ரகு, அருண், ராஜ்விக்னேஷ், சந்தோஷ்குமார் ஆகியோரை தனிபடை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து
கொலைக்கு பயன்படுத்திய நான்கு இருசக்கர வாகனங்கள் மற்றும் கத்திகளை போலீசார்
பறிமுதல் செய்து காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் ஆறுமுக கொலை
வழக்கு குற்றவாளிகளை 24 மணி நேரத்தில் போலீசார் கைது செய்தனர்
என்பது குறிப்பிடதக்கது.

No comments:
Post a Comment