புதுச்சேரி கோரிமேடு பகுதியில் உள்ள அப்பா
பைத்திய ஸ்வாமி ஆலயத்தில் முன்னாள் முதல்வர் ரங்கசாமி பிறந்த நாளை யொட்டி சிறப்பு
பூஜை நடைபெற்றது.
இதில் முன்னால் முதல்வர் ரங்கசாமி கலந்து கொண்டு சுவாமி தரிசனம்
செய்தார். மேலும் இதில் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்
வைத்தியநாதன் உட்பட என் ஆர் காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
அதனை
தொடர்ந்து முன்னாள் முதல்வர் ரங்கசாமியிக்கு சால்வை அணிவித்து பூங்கொத்து கொடுத்து
வாழ்த்து தெரிவித்தார் மேலும் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் முன்னாள்
முதல்வர் ரங்கசாமியிக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து
பொதுமக்களுக்கு சமபந்தி விருந்து வழங்கப்பட்டது நிகழ்ச்சியில் என் ஆர் காங்கிரஸ்
நிர்வாகிகள் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இதேபோல் அகில இந்திய என்
ஆர் காங்கிரஸ் பேரியக்க நிறுவனத் தலைவரும் முன்னாள் முதல்வருமான வாழும்
காமராஜர்
ரங்கசாமி ஐயா அவர்களின் பிறந்தநாளை ஒட்டி அக்கட்சியின் தொண்டர்கள்.
புதுச்சேரி
முழுவதும் பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் அன்னதானம் வழங்கி பிறந்த நாளை
கொண்டாடினர் அதன் ஒரு பகுதியாக அரியாங்குப்பம் சட்டமன்ற தொகுதி என் ஆர் காங்கிரஸ்
பிரமுகர் வெங்கடேசன் தலைமையில் 2000 பேருக்கு காலை சிற்றுண்டி வழங்கும் நிகழ்ச்சி
நடைபெற்றது.
இதில் என காங்கிரஸ் பிரமுகர்கள் மட்டும் இளைஞர்கள் கலந்து கொண்டு
பொதுமக்களுக்கு சிற்றுண்டி வழங்கி பிறந்த நாளை கொண்டாடினார்



No comments:
Post a Comment