புதுச்சேரி ரெட்டியார்பாளையம் தொகுதிக்குட்பட்ட ஜவஹர் நகர் பகுதியில் ஸ்ரீ நல்ல ஆண்டு முத்துமாரி அம்மன் அபிராமி உடனுறை தேவஸ்தானம் ஆடி மாச விழாவை தொடர்ந்து கடந்த ஆறாம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் விழா துவங்கியது.
விழாவைத் தொடர்ந்து தினமும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் மற்றும் பல்வேறு வாகனங்களில் வீதி உலா நடந்தது விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ஆடிப்பெருக்கில் சுவாமிக்கு வளையல் அலங்காரம் நடந்து பின்பு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அறங்காவலர் குழு நிர்வாகிகள் தலைவர் செல்வராஜ் துணை தலைவர் தங்கவேல் கணபதி செயலாளர் ஜெயமூர்த்தி மற்றும் திருக்காஞ்சி பாலகிருஷ்ணன் ஆகியோர் செய்திருந்தனர்....

No comments:
Post a Comment