Sunday, August 4, 2019

புதுச்சேரியில் கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளியை மர்ம நபர்கள் வெட்டிப் படுகொலை செய்துவிட்டு தப்பியோடிய சம்பவம் பரபரப்பபை ஏற்படுத்தியுள்ளது.



புதுச்சேரி ,ஜீவானந்தபுரம் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம்(25). கடந்த 6மாதங்களுக்கு முன்பு அருண் என்பவரை  கொலை செய்த வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளிவந்துள்ளார். மேலும் கொலை வழக்கில் நிலுவையில் உள்ளதால் அவ்வப்போது நீதிமன்றம் சென்று வந்துகொண்டிருந்தார். இந்நிலையில் இன்று இரவு குறிஞ்சி நகர் பகுதியில் இருசக்கர வாகனத்தில் தனியாக சென்று கொண்டிருந்தபோது பின் தொடர்ந்து வந்த 4பேர் கொண்ட மர்ம கும்பல் மறைத்து வைத்திருந்த ஆயுதங்களை கொண்டு சராமாரியாக வெட்டி சாய்த்துவிட்டு தப்பியோடினர். இதில் சம்பவ இடத்திலேயே ஆறுமுகம் உயிரிந்தார்.தகவலரிந்து சம்பவ இடத்திற்கு வந்த முதுநிலை காவல் கண்காணிப்பாளர் அபூர்வ குப்தா கொலை தொடர்பாக விசாரணை மேற்கொண்டார் மேலும் உடலை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்காக ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலை வழக்கு தொடர்பாக லாஸ்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பியோடி கும்பலை தேடி வருகின்றனர்.

No comments:

Post a Comment