முதல்அமைச்சர்
நாராயணசாமி அரசியல் கண்ணோட்டத்தோடு மத்திய அரசின் அனைத்து திட்டங்களையும்
எதிர்த்து பொறுப்பற்ற முறையில் செயல்பட்டு வருகிறார். இதனால் புதுச்சேரி நலன் பாதிக்கப்பட்டு வருகிறது. முதல்அமைச்சர் என்பதை மறந்து பா.ஜனதா அரசின் எதிர்ப்பு
அரசியல்வாதியாக மட்டுமே நாராயணசாமி செயல்படுகிறார் என குற்றம்சாட்டினார். ஹைட்ரோ கார்பன் திட்டம் நிலத்தில் வருகிறதா? கடலில் வருகிறதா? என
கூறப்படவில்லை. ஆனால் அத்திட்டத்தை கொண்டுவர மாட்டோம் என சவால் விடுகிறார். கூடங்குளம் பிரச்சினையில் வெளிநாட்டு தீயசக்தி
என உதயகுமாரை எதிர்த்தார். தற்போது ஹைட்ரோ கார்பன் திட்டத்தில் அவருடன்
கைகோர்த்துள்ளார். இதன் மர்மம் என்ன? உதயகுமார் செயல்பாடை நாராயணசாமி
ஏற்றுக்கொள்கிறாரா? என அன்பழகன் கேள்வி எழுப்பினார்..
புதுச்சேரிக்கு தனி கல்விகொள்கை கிடையாது. தமிழக அரசின் கல்வி
கொள்கைதான் புதுச்சேரிக்கும் நீடிக்கிறது. எனவே தமிழக அரசு
புதிய கல்விகொள்கையில் எடுக்கும்
முடிவுகளை அறிந்து அதனை ஏற்று புதுச்சேலிஅரசு முடிவெடுக்க வேண்டும் என அன்பழகன்
வலியுறுத்தினார்ரர ஆகஸ்ட் 30ம்தேதிக்குள்சட்டசபையில் பட்ஜெட்டிற்கு ஒப்புதல்
அளிக்கவேண்டும். ஆனால் இதுவரை அரசு பட்ஜெட்டை தாக்கல் செய்ய எந்த நடவடிக்கையும்
எடுக்கவில்லை. கடைசியாக நடந்த அமைச்சரவை கூட்டத்தில் ஒரு அமைச்சர் பங்கேற்கவில்லை.
அவர ஏன் பங்கேற்கவில்லை?
என நாராயணசாமி விளக்கம் அளிக்க வேண்டும் என்றும்
அன்பழகன் கேட்டு கொண்டார்,


No comments:
Post a Comment