புதுச்சேரி நெல்லித்தோப்பில் பழமைவாய்ந்த புனித விண்ணேற்பு அன்னை ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் 168-வது ஆண்டு பெருவிழா கொடியேற்றம் இன்று காலை நடைபெற்றது. கொடியேற்றத்தையெயாட்டி இன்று காலை ஆலயத்தில் பங்குத்தந்தை வின்சென்ட் தலைமையில் சிறப்பு திருப்பலி மற்றும் செபமாலை நடைபெற்றது.
பின்னர் உயர் மறைமாவட்ட முதன்மைகுரு அருளானந்ததம் தலைமையில் ஆண்டு பெருவிழா கொடிக்கு சிறப்பு பிரார்ததனைகள் செயய்யப்பட்டு கொடி ஆலயத்தை சுற்றி ஊர்வலமாக கொண்டுவரப்பட்டது. பின்னர் பேராலயத்தின் எதிரே உள்ள கொடி மரத்தில் ஆண்டு பெருவிழா கொடி ஏற்றப்பட்டது. அப்போது கிறிஸ்தவர்கள் கிறிஸ்தவ பாடல்களை பாடி ஜெயம் செய்தனர்.
இதில் டெல்லி சிறப்பு பிரதிநிதின ஜான்குமார் உள்பட ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து தினந்தோறும் நவ நாட்களில் காலை மாலை என இரு வேலைகளிலும் சிறப்பு திருப்பலிகள் மற்றும் சிறிய தேர்பவனிகள் நடைபெற உள்ளன. ஆண்டு பெருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆடம்பர தேர்பவனி வருகிற வருகிற 15-ம் தேதி நடைபெற உள்ளது. பின்னர் கொடியிறக்கம் நடைபெறும். ஆண்டு பெருவிழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் பங்குப்பேரவை குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர்.


No comments:
Post a Comment