Sunday, August 4, 2019

புதுச்சேரியில் பேரிடர் காலங்களில் பாதுகாத்துக்கொள்ள வேண்டிய வழிமுறைகள், யுத்திகள் குறித்து நடைபெற்ற ஒத்திகை நிகழ்ச்சியில் தீயணைப்பு வருவாய், காவல் உள்ளிட்ட பல்வேறு துறையினர் கலந்து கொண்டனர்.




பேரிடர்காலங்களான புயல், கனமழை, வெள்ள காலங்களில் பாதிக்கப்பட்டவர்களை மீட்பதற்கான பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி புதுச்சேரி மாற்றும் காரைக்காலில் தொடங்கி நடைபெற்று வருகின்றது. 

புதுச்சேரி நகரப்பகுதிகளான கிருஷ்ணா நகர் உள்ளிட்ட 10 இடங்களில் நடைபெற்ற பாதுகாப்பு மீட்பு ஒத்திகை நிகழ்ச்சியில் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர், தீயணைப்பு துறையினர், காவல்துறை மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் பங்கேற்றனர். 

பாதுகாப்பு ஒத்திகை நிகழ்வில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களை மீட்பது, வெள்ளத்தில் சிக்கிய பேருந்து பயணிகளை பாதுகாப்பது, கட்டிட விபத்து, தீ விபத்து போன்றவைகளின் போது எவ்வாறு பொதுமக்களை பாதுக்காப்பது குறித்த  ஒத்திகை நிகழ்ச்சிகள்  நடைபெற்றன.


ஒத்திகை நிகழ்வில் இந்திய கடற்படையினர் புதுச்சேரி அரசுடன் இணைத்து நடத்துவது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடதக்கது.

No comments:

Post a Comment