தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் வெப்பச்சலனம் காரணமாக மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் அறிவித்திருந்த நிலையில் புதுச்சேரியின் நகரப்பகுதிகள் மற்றும் கிராம பகுதிளான, முதலியார்பேட்டை, அரியாங்குப்பம், மூலக்குளம், தவளக்குப்பம், காலாப்பட்டு கரிக்கலாம்பாக்கம், தவளகுப்பம் திருபுவனை, வில்லியனூர், உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சுமார் அரை மணிநேரத்திற்கும் மேலாக காற்றுடன் கூடிய பரவலான மழை பெய்தது.
புதுச்சேரியில் காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு வந்த நிலையில் பரவலாக பெய்த மழையின் காரணமாக வெப்பத்தின் தாக்கம் தணிந்து குளர்ச்சியான சூழல் நிலவி வருகிறது.மேலும் பரவலான மழையின் காரணமாக பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.


No comments:
Post a Comment