Sunday, August 4, 2019

புதுச்சேரியின் முன்னாள் முதலமைச்சரும் என் ஆர் காங்கிரஸ் கட்சி தலைவருமான ரங்கசாமி பிறந்த நாளையொட்டி முன்னாள் அரசு கொறடா நேரு முன்னாள் அமைச்சர்கள் மற்றும் என் ஆர் காங்கிரஸ் நிர்வாகிகள் ரங்கசாமியை அவரது வீட்டில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.




புதுச்சேரி மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரும் என் ஆர் காங்கிரஸ் தலைவருமான ரங்கசாமி பிறந்தநாள் விழா மாநிலம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இவரது பிறந்தநாளையொட்டி முன்னாள் அரசு கொறடா  நேரு முன்னாள் அமைச்சர்கள் என்ஆர் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் பல்வேறு கட்சி தலைவர்கள் மற்றும் என் ஆர் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் ரங்கசாமியை அவரது வீட்டில் நேரில் சந்தித்து பொன்னாடை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 

அதேபோல் ரங்கசாமி பிறந்த நாளை ஒட்டி கதிர்காமத்தில் உள்ள முருகன் கோவிலில் சிறப்பு பூஜைகள் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன இதில் ஏராளமான என்ஆர் காங்கிரஸ் கலந்து கொண்டு சிறப்பு பிராத்தனை ஈடுபட்டனர்.

அதேபோல் கோரிமேட்டில் உள்ள அப்பா பைத்தியசாமி கோவிலில் ரங்கசாமி பிறந்த நாளை ஒட்டி சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன அதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு மற்றும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.




No comments:

Post a Comment