வீடுகளின்
வாசலில் மனித பொம்மையை வரைந்து அதில் கூட்டல் மற்றும் கழித்தல் குறியீடு
வரையப்பட்டதை கண்டு பீதி அடைந்த குடியிருப்பு வாசிகள் உடனடியாக இது குறித்து
தன்வந்திரி நகர் காவல் நிலையத்திற்கு புகார் தெரிவித்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த
போலீசார் வீடுகளில் வரையறுக்கப்பட்டுள்ள குறியீடுகளை ஆய்வு செய்து அதனை புகைப்படம்
எடுத்தனர் மேலும் அந்த குறியீடுகளை அழிக்கவுன் அறிவுறுத்தினர்.
காவல்துறையினரின்
அறிவுறுத்தலின் போரில் வீடுகளில் வரையப்பட்டிருந்த மர்ம குறியீடுகளை அவர்கள்
அழித்தனர். மேலும் காவல்துறையினர் இந்த குறியீடுகளை வரைந்தவர்கள் யார் என்பது
குறித்து விசாரணை மேற்கொண்டு அப்பகுதியில் தீவிர ரோந்து பணியிலும் ஈடுபட்டு
வருகின்றனர். திடீரென 10க்கும் மேற்பட்ட
வீடுகளில் வித்தியாசமான குறியீடுகள் வரையறுக்கப்பட்டதால் வட மாநிலத்தை சேர்ந்த
கொள்ளை கும்பல் இந்த குறியீடுகள் வரைந்து இருக்கலாம் என்ற சந்தேகத்தில்
அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் பயம் கலந்து பீதியுடன் தூங்காமல் விழித்து
கொண்டுருக்கின்றனர்.


No comments:
Post a Comment