புதுவை மாநில என்ஆர் காங்கிரஸ் கட்சியின்
நிறுவனரும் முன்னாள் முதல்வருமான ரங்கசாமியின் பிறந்த நாளை முன்னிட்டு மாநிலம்
முழுவதும் அவரது ஆதரவாளர்களால் நலத்திட்ட உதவிகள் அன்னதானம் ஆகியவை வழங்கப்பட்டு
வருகிறது அந்த வகையில் மணவெளி தொகுதி
என்ஆரகாங்கிரஸ் பிரமுகர் குமரகுரு
தலைமையில் அரியாங்குப்பம் பாண்டி கடலூர் நெடுஞ்சாலையில் மணவெளி சாலை சந்திப்பில்
பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர் பின்னர் முன்னாள் முதல்வர்
ரங்கசாமிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிப்பதற்காக நூற்றுக்கணக்கான தொண்டர்களுடன்
அவரது இல்லத்திற்கு இருசக்கர வாகனத்தில் புறப்பட்டு சென்றனர் இதில் மனவெளி
தொகுதி என்ஆர் காங்கிரஸார் பலர் கலந்து
கொண்டனர்.
இதேபோல் நோணாங்குப்பம் உதவும் கரங்கள்
ஆதரவற்றோர் இல்லத்தில் முன்னாள் முதல்வர் ரங்கசாமியின் பிறந்த நாளை முன்னிட்டு
அரியாங்குப்பம் சஞ்சனாஸ் குரூப் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது அரியாங்குப்பம்
என்ஆர் காங்கிரஸ் பிரமுகர் பாஸ்கர் என்கிற தெட்சிணாமூர்த்தி தலைமையில் நடைபெற்ற
இந்நிகழ்ச்சியில் பிற்படுத்தப்பட்டோர் நல வாரிய முன்னாள் சேர்மன் பாலமுருகன் அழகர்
ஆகியோர் முன்னிலை வகித்தனர் இதற்கான ஏற்பாடுகளை அரியாங்குப்பம் சஞ்சனாஸ் குரூப்
ராஜேஷ்குமார் செய்திருந்தார்

No comments:
Post a Comment