Wednesday, August 7, 2019

பலத்த காற்றுடன் பெய்த மழையின் காரணமாக நவமான மருதூர் பகுதியில் சாலையின் நடுவே விழுந்த மரத்தை அப்பகுதி இளைஞர்கள் தாங்களாகவே முன்வந்து அகற்றிய சம்பவம் அப்பகுதி பொது மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது



வெப்பச்சலனம் மற்றும் வானிலை மாற்றம் காரணமாக கடந்த சில நாட்களாகவே நகர மற்றும் புறநகர் பகுதிகளில் லேசான மழை பெய்வதால் மாலை வேளையில் இதமான காற்றும் வீசி வருகிறது மேலும் சென்னை வானிலை ஆய்வு மையம் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி யில் ஏற்பட்டுள்ள காரணமாக காற்றுடன் கூடிய மழை பெய்யும் என அறிவித்திருந்தது அதன்படி சம்பவத்தன்று மாலை திடீரென பலத்த சூறை காற்றுடன் மழை பெய்யத்துவங்கியது இதனால் வாகன ஓட்டிகளும் பள்ளி சென்று வீடு திரும்பிய மாணவ மாணவிகளும் அவதிக்கு ஆளாகினர்.

இந்நிலையில் வில்லியனூர் ஐ அடுத்துள்ள தமிழக பகுதியான கண்டமங்கலம் நவமால் மருதூர் பெருமாள் கோயில் வீதி அருகே காணப்பட்ட மரம் ஒன்று வேகம் காரணமாக சாலையின் குறுக்கே முறிந்து விழுந்தது இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இது குறித்து சம்பந்தப்பட்ட துறைக்கு தகவல் தெரிவித்தும் நடவடிக்கை ஏதும் எடுக்காததால் அப்பகுதியைச் சேர்ந்த சதீஷ் என்பவர் தலைமையில் பத்துக்கும் மேற்பட்டோர் தாங்களாகவே முன் வந்து மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர் கேரளா பகுதியில் சாலை போக்குவரத்து சீரானது இளைஞர்களின் இந்த செயல் அப்பகுதி பொது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது

நெல்லித்தோப்பு புனித விண்ணேற்பு அன்னை ஆலயத்தின் 168-வது ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.


புதுச்சேரி நெல்லித்தோப்பில் பழமைவாய்ந்த புனித விண்ணேற்பு அன்னை ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் 168-வது ஆண்டு பெருவிழா கொடியேற்றம் இன்று காலை நடைபெற்றது. கொடியேற்றத்தையெயாட்டி இன்று காலை ஆலயத்தில்  பங்குத்தந்தை வின்சென்ட் தலைமையில் சிறப்பு திருப்பலி மற்றும் செபமாலை நடைபெற்றது. 


பின்னர் உயர் மறைமாவட்ட முதன்மைகுரு அருளானந்ததம் தலைமையில் ஆண்டு பெருவிழா கொடிக்கு சிறப்பு பிரார்ததனைகள் செயய்யப்பட்டு கொடி ஆலயத்தை சுற்றி ஊர்வலமாக கொண்டுவரப்பட்டது. பின்னர் பேராலயத்தின் எதிரே உள்ள கொடி மரத்தில் ஆண்டு பெருவிழா கொடி ஏற்றப்பட்டது. அப்போது கிறிஸ்தவர்கள் கிறிஸ்தவ பாடல்களை பாடி ஜெயம் செய்தனர். 


இதில் டெல்லி சிறப்பு பிரதிநிதின ஜான்குமார் உள்பட ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து தினந்தோறும் நவ நாட்களில் காலை மாலை என இரு வேலைகளிலும் சிறப்பு திருப்பலிகள் மற்றும் சிறிய தேர்பவனிகள் நடைபெற உள்ளன. ஆண்டு பெருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆடம்பர தேர்பவனி வருகிற வருகிற 15-ம் தேதி நடைபெற உள்ளது. பின்னர் கொடியிறக்கம் நடைபெறும். ஆண்டு பெருவிழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் பங்குப்பேரவை குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர்.

ஆனந்த முத்துமாரியம்மன் ஆலயத்தில் ஆடி மாத பிரம்மோற்சவ விழாவையொட்டி சாமி வீதி உலா நடைபெற்றது.



நெல்லித்தோப்பு தொகுதிக்குட்டபட்ட பிள்ளைதோட்டம் பகுதியில் ஸ்ரீ ஆனந்த முத்துமாரியம்மன் ஆலயம் உள்ளது. இவ்வாலயத்தின் ஆண்டு பிரம்மோற்சவ விழாவையொட்டி கடந்த 10ம் தேதி கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. விழாவையொட்டி தினமும் பல்வேறு வாகனங்களில் சாமி வீதி உலா நடைபெற்றது அதன் ஒரு பகுதியாக சமூக சேவகர் தண்டபாணி ஏற்பாட்டின் பேரில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது பின்பு சுவாமி வீதிஉலா நடந்தது.

இதில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நேரு உட்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்


புதுச்சேரியில் பள்ளிகள் துவங்கி மூன்று மாதங்களாகியும் மாணவர்களுக்கு வழங்க வேண்டிய புத்தகம், சீறுடை வழங்காததை கண்டித்து மாணவர்கள் கல்வித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்



புதுச்சேரியில் கோடை விடுமுறை முடிந்து கடந்த ஜூன் மாதம் பள்ளிகள் திறக்கப்பட்டது. பள்ளிகள் திறந்து மூன்று மாதங்களுக்கு மேலாகியும் மாணவர்களுக்கு வழங்க வேண்டிய இலவச சீருடையும், குறிப்பிட்ட சில பாடங்களுக்கான புத்தகம் வழங்கவில்லை  இதனை கண்டித்து புதுச்சேரி லாஸ்பேட்டையில் உள்ள நாவலர் நெடுஞ்செழியன் அரசுப்பள்ளியை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்களது வகுப்புகளை புறக்கணித்து 100அடி சாலையில் உள்ள கல்வித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். 

கல்வித்துறை வாயிலில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் இலவச புத்தகம் மற்றும் சீருடைகளை உடனே வழங்க வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர். இதனை தொடர்ந்து மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய கல்வித்துறை இயக்குனர் ஒரு வார காலத்திற்குள் இலவச சீருடை மற்றும் புத்தகம் வழங்கப்படும் என உறுதியளித்ததை தொடர்ந்து மாணவர்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

வெப்பச்சலனம் காரணமாக புதுச்சேரியின் நகர மற்றும் கிராம பகுதிகளில் அரை மணிநேரத்திற்கு மேலாக காற்றுடன் கூடிய பரவலான மழை பெய்ததன் காரணமாக குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் வெப்பச்சலனம் காரணமாக மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் அறிவித்திருந்த நிலையில் புதுச்சேரியின் நகரப்பகுதிகள்  மற்றும் கிராம பகுதிளான, முதலியார்பேட்டை, அரியாங்குப்பம், மூலக்குளம், தவளக்குப்பம், காலாப்பட்டு கரிக்கலாம்பாக்கம், தவளகுப்பம் திருபுவனை, வில்லியனூர், உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சுமார் அரை  மணிநேரத்திற்கும் மேலாக காற்றுடன் கூடிய  பரவலான மழை பெய்தது. 


புதுச்சேரியில் காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு வந்த  நிலையில் பரவலாக பெய்த  மழையின் காரணமாக வெப்பத்தின் தாக்கம் தணிந்து  குளர்ச்சியான சூழல் நிலவி வருகிறது.மேலும் பரவலான மழையின் காரணமாக பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

நகரப்பகுதியில் உள்ள வீடுகளில் மர்ம நபர்கள் பொம்மை வினோத குறியீடு வரைந்த சமப்வத்தை தொடர்ந்து குற்றச்செயல்களை தடுக்கும் பொருட்டும், வினோத குறியீடு வரைந்த குற்றவாளிகளை கண்டறியும் வகையில் ரெயின்போ நகர் பகுதியில் அப்பகுதி மக்கள் 4 சிசிடிவி கேமிராக்களை பொருத்தியுள்ளனர்.



புதுச்சேரி நகரப்பகுதியான சாரம் பகுதியில் சுமார் 10 வீடுகளில் மனித பொம்மை வரைந்த நிலையில் வினோத குறியீடு இருந்தது. இதை பார்த்த அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள், கொள்ளை அடிப்பதற்காக வடமாநில கும்பல் அடையாளம் காட்டுவதற்கு வரைந்ததாக எண்ணி அச்சம் அடைந்தனர். காவல்துறைக்கு தகவல் தெரிவித்ததை தொடர்ந்து இந்த சம்பவத்தில் தொடர்புடைய நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 


இந்நிலையில் புதுச்சேரி நகர பகுதியில் உள்ள ரெயின்போ நகர் பகுதி மக்கள், அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் இருப்பதற்கும், குற்றவாளிகளை எளிதாக கண்டுபிடிப்பதற்காக 4 சிசிடிவி கேமராக்களை தங்களது பகுதியில் அமைத்துள்ளனர். இதை கிழக்கு பகுதி காவல் கண்காணிப்பாளர் மாறன் திறந்து வைத்து, செயல்பாட்டிற்கு கொண்டு வந்தார். இதே போல் அனைத்து மக்களுக்கு சிசிடிவி கேமராக்களை வீடுகள் மற்றும் கடைகளில் பொருத்த முன்வர வேண்டும் என கேட்டுக்கொண்டார். இதில் காவல் ஆய்வாளர் செந்தில்குமார், காங்கிரஸ் சிறப்பு அழைப்பாளர் வினோத் மற்றும் அப்பகுதி மக்கள் உடனிருந்தனர்.


ஒரே நாளில் ⭐ஜி.வி.பிரகாஷின் 2⃣ திரைப்படங்கள் வெளியாகிறதா ⁉


எம்.எம்.சந்திரமௌலி 🎬இயக்கத்தில் ஜி.வி பிரகாஷ் - ஷாலினி பாண்டே இணைந்து நடித்துள்ள படம் 🎥'100 சதவீதம் காதல்'. இந்த படம் செப்டம்பர் 6ம் தேதி வெளியாகவுள்ளதாக 📣அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சசி இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் - சித்தார்த் இணைந்து நடித்துள்ள 📽'சிவப்பு மஞ்சள் பச்சை' திரைப்படமும் செப்டம்பர் 6ம் 📆தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Tuesday, August 6, 2019

📽'இந்தியன் 2' படத்தின் புதிய தகவல் ❗


இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில், உலகநாயகன் 😎கமல்ஹாசன் நடிப்பில் 'இந்தியன் 2' படத்தின் இரண்டாம் பாகம் 🎬உருவாகி வருகிறது. இதில் நாயகியாக நடிகை ⭐காஜல் அகர்வால் நடித்து வருகிறார். சமீபத்தில் இந்த படத்தில் நடிகர் சித்தார்த் மற்றும் நடிகை பிரியா பவானி ஷங்கர் 🎭ஆகியோர் இணைந்துள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில் 💃பிரியா பவானி ஷங்கர் அளித்துள்ள பேட்டியில், 'இந்தியன் 2' படத்தில் முன்னணி கதாபாத்திரம் ஒன்றில் நடிக்க 💺ஷங்கர் அழைத்ததாகவும், அந்த கதாபாத்திரம் பிடித்திருந்ததால் உடனடியாக நடிக்க 👍ஒப்புக்கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் திராவிட விடுதலைக் கழக முன்னாள் துணைத் தலைவர் நடராஜன் நினைவேந்தல் நிகழ்ச்சி நிகழ்ச்சியில் அவரது படத்தினைத் திறந்து வைத்து மரியாதை செலுத்தினார்.


புதுச்சேரி திராவிட விடுதலைக் கழகத்தின் துணைத் தலைவர் நடராஜன் நினைவேந்தல் நிகழ்ச்சி தனியார் உணவகத்தில் நடைபெற்றது. இதில் நல்லய்யன் வரவேற்புரை ஆற்றினார். திராவிட கழகத்தின் பொதுச் செயலாளர் சந்திரசேகரன் தலைமை தாங்கினார். மாநில தலைவர் வீரமணி நிர்வாகிகள் அரங்கராசன், ராசு, அறிவழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக ம முன்னாள் முதல்வர் ராமச்சந்திரன், ஆகியோர் கலந்து கொண்டு அவரது படத்தினைத் திறந்து வைத்தனர். மேலும் இதில் திராவிட கழகத்தின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு அவரது படத்திற்கு மரியாதை செலுத்தும் வகையில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்....

வட மாநிலங்களில் நடைபெறும் வன்புணர்வு கொடுமையைக் கண்டித்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன


உத்தரபிரதேச மாநிலம் உன்னால் பகுதியில் நடைபெற்ற வன்புணர்வு கொடூரம் மட்டும் வட மாநிலங்களில் நடைபெறும் பெண்கள் மீதான தாக்குதல் சம்பவங்களை கண்டித்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் பாகூர் தொகுதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது ஆர்ப்பாட்டத்திற்கு அமைப்பின் பாபு ஒருதலை நீ மலர்விழி தலைமை ஏற்றார் பின்னர் அமைப்பின் பாகூர் தொகுதி செயலாளர் இளவரசி அமைப்பின் மாநிலத் தலைவர் சந்திரா மாநில செயலாளர் சக்தியா சமம் அமைப்பின் பொருளாளர் சிவகாமி ஆகியோர் கண்டன உரையாற்றினர் தொடர்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தியும் மத்திய மாநில அரசுகளை கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன நிறைவாக சந்திரவதனி நன்றி கூறினார்

முன்னாள் முதல்வர் ரங்கசாமி பிறந்த நாளையொட்டி புதுச்சேரி கூட்டுறவு நகர வங்கி சங்கம் சார்பில் அன்னதானம் வழங்கினார்கள்



புதுச்சேரி முன்னாள் முதல்வரும் எதிர்க்கட்சித் தலைவரும் என் என் ஆர் காங்கிரஸ் தலைவருமான ரங்கசாமியின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது ஆதரவாளர்கள் பல்வேறு இடங்களில் அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அதன்படி புதுச்சேரி கூட்டுறவு நகர வங்கி ஊழியர்கள் ஜனநாயக சங்கம் சார்பில் நேரு வீதியில் உள்ள கூட்டுறவு வங்கி தலைமை அலுவலகத்தில் 500 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


இதில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சங்கத்தின் கௌரவத் தலைவர் தமிழ்ச்செல்வன் கலந்துகொண்டு ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்கினார் இதில் கூட்டுறவு நகர வங்கி சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்


அரியாங்குப்பம் அருந்ததி புறம் பகுதியில் அரசு சார்பில் கட்டப்பட்டு புதர் மண்டி பராமரிப்பின்றி காணப்படும் பொது கழிப்பிடத்தை மறுசீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமான அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.




அரியாங்குப்பம் அருந்ததி புறம் பகுதியில் அரசு சார்பில் கட்டப்பட்டு புதர் மண்டி பராமரிப்பின்றி காணப்படும் பொது கழிப்பிடத்தை மறுசீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமான அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

பாரதிதாசன் அரசினர் மகளிர் கல்லூரி பல்கலைக்கழக மானியக்குழுவின் வழிகாட்டுதலின்படி மாணவியர் புத்தாக்கப் பயிற்சி முகாமில் ஏராளமான மாணவிகள், பேராசிரியர்கள் கலந்துகொண்டு பநன்பெற்றனர்.





பாரதிதாசன் அரசினர் மகளிர் கல்லூரி பல்கலைக்கழக மானியக்குழுவின் வழிகாட்டுதலின்படி மாணவியர் உய்த்தறிஞர்களுக்குப் புத்தாக்கப் பயிற்சி முகாம் நடைபெற்றது. முகாமை கல்லூரி முதல்வர் சுப்ரமணியன் தலைமை தாங்கி துக்கி வைத்தார். இதில் 2019 2020 ஆம் கல்வியாண்டில் சேருகின்ற இளநிலை முதுநிலை முதலாமாண்டு மாணவியர்களுக்கு அறிவுறுத்த வேண்டிய தரவுகள் குறித்து கலந்துரையாடப்பட்டன. மேலும் இக்காலக் கல்விமுறை சுய மேம்பாடு உடல்நலமும் ஓம்புதல் உணர்வுசார் கூறுகள் பற்றியும் விளக்கப்பட்டன. அதுமட்டுமில்லாமல் மாணவியர்கள் கல்லூரிக்கு வந்து செல்லும் போக்குவரத்து சூழல் பெற்றோர்களை போல் மாணவியர்களை பேராசிரியர்கள் பாதுகாப்பு எவ்வாறு வழிநடத்த வேண்டும் என்பது குறித்தும் பேராசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் ஏராளமான மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

அரசியல் கண்ணோட்டத்தோடு மத்திய அரசின் திட்டங்களை முதல்அமைச்சர் நாராயணசாமி எதிர்ப்பதால்புதுச்சேரி நலன் பாதிக்கப்படுவதாகஅதிமுக சட்டமன்ற கட்சித்தலைவர் அன்பழகன் குற்றம்சாட்டியுள்ளார்..


முதல்அமைச்சர் நாராயணசாமி அரசியல் கண்ணோட்டத்தோடு மத்திய அரசின் அனைத்து திட்டங்களையும் எதிர்த்து பொறுப்பற்ற முறையில் செயல்பட்டு வருகிறார். இதனால் புதுச்சேரி  நலன் பாதிக்கப்பட்டு வருகிறது.                     முதல்அமைச்சர் என்பதை மறந்து பா.ஜனதா அரசின் எதிர்ப்பு அரசியல்வாதியாக மட்டுமே நாராயணசாமி செயல்படுகிறார் என குற்றம்சாட்டினார். ஹைட்ரோ கார்பன் திட்டம் நிலத்தில் வருகிறதா? கடலில் வருகிறதா? என கூறப்படவில்லை. ஆனால் அத்திட்டத்தை கொண்டுவர மாட்டோம் என சவால் விடுகிறார்.  கூடங்குளம் பிரச்சினையில் வெளிநாட்டு தீயசக்தி என உதயகுமாரை எதிர்த்தார். தற்போது ஹைட்ரோ கார்பன் திட்டத்தில் அவருடன் கைகோர்த்துள்ளார். இதன் மர்மம் என்ன? உதயகுமார் செயல்பாடை நாராயணசாமி ஏற்றுக்கொள்கிறாரா? என அன்பழகன் கேள்வி எழுப்பினார்.. 

புதுச்சேரிக்கு தனி கல்விகொள்கை  கிடையாது. தமிழக அரசின் கல்வி கொள்கைதான் புதுச்சேரிக்கும் நீடிக்கிறது. எனவே தமிழக அரசு புதிய  கல்விகொள்கையில் எடுக்கும் முடிவுகளை அறிந்து அதனை ஏற்று புதுச்சேலிஅரசு முடிவெடுக்க வேண்டும் என அன்பழகன் வலியுறுத்தினார்ரர ஆகஸ்ட் 30ம்தேதிக்குள்சட்டசபையில் பட்ஜெட்டிற்கு ஒப்புதல் அளிக்கவேண்டும். ஆனால் இதுவரை அரசு பட்ஜெட்டை தாக்கல் செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கடைசியாக நடந்த அமைச்சரவை கூட்டத்தில் ஒரு அமைச்சர் பங்கேற்கவில்லை. அவர ஏன் பங்கேற்கவில்லை? என நாராயணசாமி  விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் அன்பழகன் கேட்டு கொண்டார்,


தூய ஜான்மரி வியான்னி வியானி ஆலய ஆடம்பர தேர்பவனி திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்



புதுச்சேரி ரெயின்போ நகர் பகுதியில் தூய ஜான்மரி வியான்னி ஆலயம் உள்ளது. இவ்வாலயத்தின் ஆண்டு பெருவிழாவையொட்டி கடந்த 28ம் தேதி  கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. விழாவையொட்டி தினமும் காலையில் சிறப்பு ஆராதனையும் மாலையில் சிறிய தேர் பவனியும் திருப்பலியும் நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான  ஆடம்பர தேர்பவனியில் சிறப்பு விருந்தினராக சென்னை-மயிலை உயர்மறைமாவட்டம் மாநில முன்னாள் பேராயர் சின்னப்பா ஆலய பங்குதந்தை தோமனிக் ரொசாரியோ ஆகியோர் தலைமையில் சிறப்பு திருப்பலி நடந்தது. அதனை தொடர்ந்து பக்தர்கள் தேர்ரை வடம்பிடித்து இழுத்து பிரார்த்தனை செய்தனர். இதில் பாராளுமன்ற உறுப்பினர் வைத்திலிங்கம் மற்றும் காங்கிரஸ் கட்சி சிறப்பு அழைப்பாளர் வினோத் உட்பட ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.....

பிள்ளை தோட்டம் ஆனந்த முத்துமாரியம்மன் தேவஸ்தான ஆடி மாத பிரம்மோற்சவ விழாவையொட்டி நடைபெற்ற சுவாமி வீதி உலா நிகழ்ச்சியில் பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்



புதுச்சேரி பிராந்தியம் பிள்ளை தோட்டம் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ ஆனந்த முத்துமாரியம்மன் தேவஸ்தான ஆடி மாத பிரம்மோற்சவ விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. அதன்படி கடந்த மாதம் 22ஆம் தேதி மங்கள இசையுடன் துவங்கிய விழாவில் ஸ்ரீ குறையாத அம்மன் திருக்கோவிலில் பொங்கலிட்டு வழிபாடு சித்தன் குடி ஸ்ரீ முனீஸ்வரன் திருக்கோவிலில் பொங்கலிட்டு வழிபாடு அய்யனார் நகரில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ வெள்ளந்தாங்கி அய்யனார் திருக்கோவில் பொங்கலிட்டு வழிபாடு பிள்ளை தோட்டம் அருள்மிகு ஸ்ரீ ஆனந்த பிரணவ சக்தி அம்மன் கங்கை முத்து மாரியம்மன் திருக்கோவிலில் பொங்கலிட்டு வழிபாடு ஸ்ரீ ஆனந்த முத்து மாரியம்மன் திருக்கோவில் பொங்கலிட்டு வழிபாடு சக்தி கரக வீதி உலா சாரி வார்த்தை கும்பம் படைத்தல் அம்மனுக்கு சகல அபிஷேகம் எல்லை கரகம் வீதி உலா காப்பு கட்டுதல் ஆகியவை நடைபெற்றன விழாவின் ஒரு பகுதியாக அம்மன் ஸ்ரீ மீனாட்சி அலங்காரத்தில் வீதி உலா நடைபெற்றது ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர் இதற்கான ஏற்பாடுகளை ஆலய அறங்காவலர் குழுவினர் ஊர் பொதுமக்கள் மற்றும் அப்பகுதி இளைஞர்கள் செய்திருந்தனர்

இதேபோல் காரணம் மணிக்கு போன் போன் கடை வீதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலய ஆண்டு ஆடி உற்சவம் திருவிழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது அதன்படி கடந்த மாதம் 25ஆம் தேதி மங்கள இசையுடன் துவங்கிய விழாவில் ஸ்ரீ விக்னேஸ்வர பூஜை கொடியேற்றம் அம்மனுக்கு நவ போட்டியின் அவர் திரவியங்களால் அபிஷேகம் அலங்காரம் ஆராதனைகள் நடைபெற்றன தொடர்ந்து மூன்றாம் வெள்ளிக்கிழமையையொட்டி பூங்கரகம் திருவீதி உலா சாரி பார்த்தல் அம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரம் ஆகியவை நடைபெற்றன பின்னர் விழாவின் ஒரு பகுதியாக அம்மன் ஊஞ்சல் உற்சவ நிகழ்ச்சி நடைபெற்றது இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர் இதற்கான ஏற்பாடுகளை ஆலய சிறப்பு அதிகாரி மற்றும் விழாக்குழுவினர் அப்பகுதி பொதுமக்கள் இளைஞர்கள் செய்திருந்தனர்


ஏழாவது ஊதியக்குழு நிலுவைத்தொகையை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தலைமை தபால் நிலையம் எதிரே அங்கன்வாடி ஓய்வுபெற்ற ஊழியர்கள் சங்கம் சார்பில் தர்ணா போராட்டம் நடைபெற்றது.



அங்கன்வாடியில் பணிகளை செய்து பின்னர் மகளிர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் மேம்பாட்டு கழகத்தில் இருந்து பணி ஓய்வு பெற்ற பணி ஓய்வு பெறுகின்ற பணியாளர்கள் அனைவருக்கும் மாதந்தோறும் ஓய்வூதியம் வழங்க வேண்டும் நிலுவையில் உள்ள ஏழாவது ஊதியக்குழு தொகையினை குறிப்பிட்ட காலத்தில் வழங்க வேண்டும் ஓய்வு பெற்ற அனைத்து அங்கன்வாடி பணியாளர்களுக்கு மாதாந்திர உதவித் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தலைமை தபால் நிலையம் முன்பு அங்கன்வாடி ஓய்வுப் பெற்ற ஊழியர் சங்கம் சார்பில் தர்ணா ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் சம்மேளன நிர்வாகிகள் தலைமை தாங்கினர் சங்க நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர் சுமார் 50க்கும் மேற்பட்ட ஓய்வுபெற்ற ஊழியர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநில அரசை கண்டித்து கண்டன முழக்கங்கள் எழுப்பினர்.

புதுச்சேரி சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் நீர் விளையாட்டு பணிபுரியும் ஊழியர்களுக்கு நிலுவையிலுள்ள சம்பளத்தை வழங்க கோரி சுற்றுலா வளர்ச்சிக் கழக தலைமை அலுவலகத்தில் ஊழியர்கள் பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.




புதுச்சேரி சுற்றுலா வளர்ச்சி கழக நீர்விளையாட்டு பகுதியில் சுமார் 200க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு கடந்த சில மாதங்களாக சம்பளம் வாங்காத நிலையில் பல கட்ட போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில் கடற்கரை சாலையில் உள்ள சுற்றுலா வளர்ச்சித் தலைமை அலுவலகத்தில் இயக்குனர் அலுவலகம் முன்பு ஊழியர்கள் பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர் இயக்குனரை கண்டித்து கண்டன முழக்கங்களை எழுப்பினர். தகவலறிந்து வந்த பெரிய கடை காவல் ஆய்வாளர் செந்தில்குமரன் ஊழியரிடம் பேச்சுவார்த்தை செய்து அப்புறப்படுத்தினர்

📺'பிக் பாஸ் 3' - சரவணன் வெளியேற்றப்பட்டதற்கு இது தான் காரணமா ⁉




பிக் பாஸ் 🏠இல்லத்தில் இருந்து நேற்று சரவணன் நேற்று அதிரடியாக வெளியேற்றப்பட்டார். இது சக 🎭போட்டியாளர்களுக்கு மட்டுமன்றி பார்வையாளர்களுக்கும் கடும் 😯அதிர்ச்சியை அளித்தது.

இந்நிலையில் கடந்த சனிக்கிழமை அன்று ஆள் மாறி கேள்வி கேட்கும் டாஸ்க் ஒன்றை 😎கமல்ஹாசன் நடத்தியபோது கமலஹாசன் லாஸ்லியாவிடம் டாஸ்க் குறித்து 🗣விளக்கி கொண்டிருந்தார். அப்போது சரவணன் மிக மெதுவான குரலில் "கோர்த்து விடுறாண்டா" என்று கூறினார். இதனால் பிக்பாஸ் குழுவினர் சரவணனை வெளியேற்றி 🙄இருக்கலாம் என கூறப்படுகிறது. மேலும் திடீரென பெண்கள் மீது அதிக அக்கறை விஜய் 📺தொலைக்காட்சிக்கு வந்தது ஆச்சரியத்தை அளிப்பதாகவும், பிக்பாஸ் இல்லத்தில் உள்ள 👩🏻பெண் போட்டியாளர்கள் அணியும் உடைகள் மற்றும் காதல் நாடகங்கள் ஆகியவற்றில் வராத பெண்களுக்கான 🤷‍♀அவமரியாதை, சரவணன் பெண்கள் குறித்து பேசியதில் வந்து விட்டதா❓ என்று சமூக வலைத்தளத்தில் 👥பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

புதுச்சேரி அண்ணாசாலை அருகே அமைந்துள்ள ஸ்ரீ ராமானுஜர் பஜனை மடத்தில் ஸ்ரீதேவி பூதேவி உடன் பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் அத்தி ஆனந்த் ரங்கநாதர் குறித்து சில தகவல்கள்


புதுச்சேரி அண்ணாசாலை அருகே அமைந்துள்ள ஸ்ரீ ராமானுஜர் பஜனை மடத்தில் ஸ்ரீதேவி பூதேவி உடன் பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் அத்தி ஆனந்த் ரங்கநாதர் குறித்து சில தகவல்கள்......


மேலும் Youtubeல் பார்க்க :

முன்னாள் முதல்வர் ரங்கசாமியின் பிறந்த நாள் விழா.......



புதிய மாநில என்ஆர் காங்கிரஸ் கட்சியின் நிறுவனரும் மக்கள் முதல்வர் என்று போற்றப்படும் முன்னாள் முதல்வர் ரங்கசாமியின் பிறந்த நாள் விழா மாநிலம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது என் ஆர் காங்கிரஸ் பிரமுகர்கள் நலத்திட்ட உதவிகள் அன்னதானம் செய்து அவரது பிறந்தநாளை மிக சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.


மேலும் மணக்குள விநாயகர் ஆலயத்தில் தங்கத்தேர் இழுத்தும் அவரது பிறந்தநாளை கொண்டாடினர் இதனைத் தொடர்ந்து அரியாங்குப்பம் என்ஆர் காங்கிரஸ் பிரமுகர் பாஸ்கர் என்கிற  தட்சிணாமூர்த்தி ரங்கசாமி இல்லத்திற்குச் சென்று தனது ஆதரவாளர்களுடன் வாழ்த்து தெரிவித்து நோணாங்குப்பம் உதவும் கரங்கள் ஆதரவற்றோர் இல்லத்தில் தனது ஆதரவாளர்களுடன்சென்று அங்கிருக்கும் மாணவர்களுக்கு  அன்னதானம் வழங்கினார் இதில் அரியாங்குப்பம் என்ஆர் காங்கிரஸ் பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.

📽'நேர்கொண்ட பார்வை' குறித்த புதிய தகவல் 😍




⭐அஜித் நடிப்பில் உருவாகியுள்ள 'நேர்கொண்ட பார்வை' திரைப்படம் நாளை மறுநாள் 📽திரைக்கு வரவுள்ள நிலையில் இந்த படத்தின் பிரிமியர் காட்சி இன்று காலை சிங்கப்பூரில் வெளியாகியுள்ளது. இதன் மூலம் இந்த படத்தில் அஜித்தின் பெயர் பரத் சுப்ரமணியன் என்று 👀தெரியவந்துள்ளது. இதனிடையே படத்தின் 💺தயாரிப்பாளர் போனி கபூர், "என்னுடைய மனைவி ஸ்ரீதேவியின் 🙄கனவை நான் நிறைவேற்றிவிட்டேன். அஜித்குமார் மற்றும் இயக்குநர் ஹெச்.வினோத் இல்லாமால் இது சாத்தியமில்லை. படக்குழுவினருக்கு எனது 💐வாழ்த்துகள்" என்று ட்வீட் ஒன்றை ✍பதிவிட்டுள்ளார்.

புதுச்சேரி சாராம் பகுதியில் உள்ள சுப்ரமணிய சுவாமி கோவில் தெருவில் 10க்கும் மேற்பட்ட வீடுகளில் வினோத குறியீடுகள் வரையப்பட்டுள்ளதால் அப்பகுதிகை சேர்ந்த மக்கள் பயம் கலந்து பீதியுடன் உள்ளனர்....




வீடுகளின் வாசலில் மனித பொம்மையை வரைந்து அதில் கூட்டல் மற்றும் கழித்தல் குறியீடு வரையப்பட்டதை கண்டு பீதி அடைந்த குடியிருப்பு வாசிகள் உடனடியாக இது குறித்து தன்வந்திரி நகர் காவல் நிலையத்திற்கு புகார் தெரிவித்தனர்.  இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் வீடுகளில் வரையறுக்கப்பட்டுள்ள குறியீடுகளை ஆய்வு செய்து அதனை புகைப்படம் எடுத்தனர் மேலும் அந்த குறியீடுகளை அழிக்கவுன் அறிவுறுத்தினர். 


காவல்துறையினரின் அறிவுறுத்தலின் போரில் வீடுகளில் வரையப்பட்டிருந்த மர்ம குறியீடுகளை அவர்கள் அழித்தனர். மேலும் காவல்துறையினர் இந்த குறியீடுகளை வரைந்தவர்கள் யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு அப்பகுதியில் தீவிர ரோந்து பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.  திடீரென 10க்கும் மேற்பட்ட வீடுகளில் வித்தியாசமான குறியீடுகள் வரையறுக்கப்பட்டதால் வட மாநிலத்தை சேர்ந்த கொள்ளை கும்பல் இந்த குறியீடுகள் வரைந்து இருக்கலாம் என்ற சந்தேகத்தில் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் பயம் கலந்து பீதியுடன் தூங்காமல் விழித்து கொண்டுருக்கின்றனர்.


Sunday, August 4, 2019

புதுச்சேரி ரெட்டியார்பாளையத்தில் உள்ள ஸ்ரீ நல்லாண்டு முத்துமாரியம்மன் ஆலயத்தில் ஆடி பெருக்கு விழாவையொட்டி சுவாமிக்கு வளையல் அலங்காரம் நடைபெற்றது



புதுச்சேரி ரெட்டியார்பாளையம் தொகுதிக்குட்பட்ட ஜவஹர் நகர் பகுதியில் ஸ்ரீ நல்ல ஆண்டு முத்துமாரி அம்மன்  அபிராமி உடனுறை தேவஸ்தானம் ஆடி மாச விழாவை தொடர்ந்து கடந்த ஆறாம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் விழா துவங்கியது. 

விழாவைத் தொடர்ந்து தினமும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் மற்றும் பல்வேறு வாகனங்களில் வீதி உலா நடந்தது விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ஆடிப்பெருக்கில் சுவாமிக்கு வளையல் அலங்காரம் நடந்து பின்பு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அறங்காவலர் குழு நிர்வாகிகள் தலைவர் செல்வராஜ் துணை தலைவர் தங்கவேல் கணபதி செயலாளர் ஜெயமூர்த்தி மற்றும் திருக்காஞ்சி பாலகிருஷ்ணன் ஆகியோர் செய்திருந்தனர்....

புதுச்சேரியில் பேரிடர் காலங்களில் பாதுகாத்துக்கொள்ள வேண்டிய வழிமுறைகள், யுத்திகள் குறித்து நடைபெற்ற ஒத்திகை நிகழ்ச்சியில் தீயணைப்பு வருவாய், காவல் உள்ளிட்ட பல்வேறு துறையினர் கலந்து கொண்டனர்.




பேரிடர்காலங்களான புயல், கனமழை, வெள்ள காலங்களில் பாதிக்கப்பட்டவர்களை மீட்பதற்கான பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி புதுச்சேரி மாற்றும் காரைக்காலில் தொடங்கி நடைபெற்று வருகின்றது. 

புதுச்சேரி நகரப்பகுதிகளான கிருஷ்ணா நகர் உள்ளிட்ட 10 இடங்களில் நடைபெற்ற பாதுகாப்பு மீட்பு ஒத்திகை நிகழ்ச்சியில் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர், தீயணைப்பு துறையினர், காவல்துறை மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் பங்கேற்றனர். 

பாதுகாப்பு ஒத்திகை நிகழ்வில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களை மீட்பது, வெள்ளத்தில் சிக்கிய பேருந்து பயணிகளை பாதுகாப்பது, கட்டிட விபத்து, தீ விபத்து போன்றவைகளின் போது எவ்வாறு பொதுமக்களை பாதுக்காப்பது குறித்த  ஒத்திகை நிகழ்ச்சிகள்  நடைபெற்றன.


ஒத்திகை நிகழ்வில் இந்திய கடற்படையினர் புதுச்சேரி அரசுடன் இணைத்து நடத்துவது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடதக்கது.

வாலிபர் வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய 8 குற்றவாளிகளை போலீசார் கைது செய்து காலாப்பட்டு மத்திய சிறையிலடைத்தனர்.


புதுச்சேரி, ஜீவானந்தபுரம் பகுதியை சேர்ந்த ஆறுமுகம்(25) என்ற வாலிபர் கடந்த 6மாதங்களுக்கு முன்பு அருண் என்பவரை  கொலை செய்த வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளிவந்திருந்தார். இந்நிலையில் கடந்த 2  ஆம் தேதி இரவு குறிஞ்சி நகர் பகுதியில் இருசக்கர வாகனத்தில் தனியாக சென்று கொண்டிருந்தபோது ஆறுமுகத்தை பின் தொடர்ந்து வந்த 8பேர் கொண்ட மர்ம கும்பல் மறைத்து வைத்திருந்த ஆயுதங்களை கொண்டு சராமாரியாக ஆறுமுகத்தை வெட்டி கொலை செய்துவிட்டு தப்பியோடினர். இக்கொலை சம்பவம் குறித்து லாஸ்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பியோடி கும்பலை தேடி வந்திருந்த நிலையில் அருண் கொலைக்கு பழிக்கு பழிவாங்க அருணின் ஆதரவாளர்கள் ஆறுமுகத்தை வெட்டி கொலை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து தமிழக பகுதியான மொரட்டாண்டியில் மறைந்திருந்த விக்கி,அக்‌ஷய், சுரேஷ், சக்தி, ரகு, அருண், ராஜ்விக்னேஷ், சந்தோஷ்குமார் ஆகியோரை தனிபடை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து கொலைக்கு பயன்படுத்திய நான்கு இருசக்கர வாகனங்கள் மற்றும் கத்திகளை போலீசார் பறிமுதல் செய்து காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் ஆறுமுக கொலை வழக்கு குற்றவாளிகளை 24 மணி நேரத்தில் போலீசார் கைது செய்தனர் என்பது குறிப்பிடதக்கது.

புதுவை மாநில என்ஆர் காங்கிரஸ் கட்சியின் நிறுவனரும் முன்னாள் முதல்வருமான ரங்கசாமியின் பிறந்தநாள் விழா....



புதுவை மாநில என்ஆர் காங்கிரஸ் கட்சியின் நிறுவனரும் முன்னாள் முதல்வருமான ரங்கசாமியின் பிறந்த நாளை முன்னிட்டு மாநிலம் முழுவதும் அவரது ஆதரவாளர்களால் நலத்திட்ட உதவிகள் அன்னதானம் ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது அந்த வகையில் மணவெளி தொகுதி  என்ஆரகாங்கிரஸ் பிரமுகர்  குமரகுரு தலைமையில் அரியாங்குப்பம் பாண்டி கடலூர் நெடுஞ்சாலையில் மணவெளி சாலை சந்திப்பில் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர் பின்னர் முன்னாள் முதல்வர் ரங்கசாமிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிப்பதற்காக நூற்றுக்கணக்கான தொண்டர்களுடன் அவரது இல்லத்திற்கு இருசக்கர வாகனத்தில் புறப்பட்டு சென்றனர் இதில் மனவெளி தொகுதி  என்ஆர் காங்கிரஸார் பலர் கலந்து கொண்டனர்.


இதேபோல் நோணாங்குப்பம் உதவும் கரங்கள் ஆதரவற்றோர் இல்லத்தில் முன்னாள் முதல்வர் ரங்கசாமியின் பிறந்த நாளை முன்னிட்டு அரியாங்குப்பம் சஞ்சனாஸ் குரூப் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது அரியாங்குப்பம் என்ஆர் காங்கிரஸ் பிரமுகர் பாஸ்கர் என்கிற தெட்சிணாமூர்த்தி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பிற்படுத்தப்பட்டோர் நல வாரிய முன்னாள் சேர்மன் பாலமுருகன் அழகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர் இதற்கான ஏற்பாடுகளை அரியாங்குப்பம் சஞ்சனாஸ் குரூப் ராஜேஷ்குமார் செய்திருந்தார்

முன்னாள் முதல்வர் ரங்கசாமி பிறந்த நாளையொட்டி என்ஆர் காங்கிரஸ் கட்சி சார்பில் மணக்குள விநாயகர் ஆலயத்தில் தங்கத் தேர் இழுத்து சிறப்பு வழிபாடு செய்தனர்



புதுச்சேரியில் என் ஆர் காங்கிரஸ் கட்சி தலைவரும் முன்னாள்  முதல்வருமான ரங்கசாமி பிறந்த நாளையொட்டி என் ஆர் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் புதுச்சேரி முழுவதும் கொண்டாடி வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக பிரசித்தி பெற்ற ஸ்ரீ மணக்குள விநாயகர் ஆலயத்தில் என் ஆர் காங்கிரஸ் கட்சி செயலாளர் சட்டமன்ற உறுப்பினருமான ஜெயபால் மற்றும் பொது செயலாளர் பாலன்  தலைமையில் தங்கத்  தேர் இழுத்து  சிறப்பு வழிபாடு செய்தனர்.

நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் ராஜவேல்  முன்னால் சட்டமன்ற உறுப்பினர்கள், என் ஆர் காங்கிரஸ் கட்சியின் மாநில நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர் அதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது

இதேபோல் வாழும் காமராஜர் என எல்லோராலும் அன்போடு அழைக்கப்படும் மக்கள் முதல்வர் ரங்கசாமி ஐயா அவர்களின் பிறந்தநாளை என் ஆர் காங்கிரஸ் பிரமுகர்கள் தங்களின் குடும்ப விழா கொண்டாடி மகிழ்ந்தனர் மேலும் விழாவையொட்டி ஆயிரக்கணக்கான பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் அன்னதானம் மற்றும் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் ஆகியவை நடைபெற்றன அதன் ஒரு பகுதியாக மண்ணாடிப்பட்டு சட்டமன்றத் தொகுதி என் ஆர் காங்கிரஸ் சார்பில் மக்கள் முதல்வரின் பிறந்த நாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது மேலும் இதனையொட்டி ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது அதன்படி காட்டேரிக்குப்பம் கடைவீதி அருகே நடைபெற்ற விழாவிற்கு தலைமை ஏற்ற என் ஆர் காங்கிரஸ் பிரமுகர் கந்தன் நாராயணசாமி மக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார் மேலும் நிகழ்ச்சியில் என் ஆர் காங்கிரஸ் பிரமுகர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்

பாவேந்தர் பாரதிதாசன் மாதந்திர விழாவையொட்டி விடுதலைப் படைப்புகளும் பாவேந்தரும் என்ற தலைப்பில் சிறப்புக் கவியரங்கம் நடைபெற்றது




புதுச்சேரி பாரதிதாசன் அறக்கட்டளை மாதம் தோறும் பாவேந்தர் கலை இலக்கியத் திங்கள் விழா பாவேந்தர் பாரதிதாசனார் அரசு அருங்காட்சியகத்தில் நடைபெற்று வருகிறது இந்த மாதத்திற்கான விழா விடுதலைப் படைப்புகளும்  பாவேந்தரும் என்ற தலைப்பில் கவியரங்கம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அறக்கட்டளை தலைவர் கலைமாமணி முனைவர் கோ பாரதி தலைமை தாங்கி தலைமை உரை ஆற்றினார் மேலும் இந்நிகழ்ச்சியில் சங்க மாவட்ட தலைவர் செல்வராஜ் கல்பாக்கம் அணுமின் நிலைய அதிகாரி கவிஞர் வெற்றிவேந்தன் வாழ்த்துரை வழங்கினார் மாணவிகள் பல்வேறு தேச தலைவர்கள் பற்றி சிறப்புரை ஆற்றினர் தேன்மொழி நன்றியுரை ஆற்றினார் இதில் தமிழறிஞர்கள் பலர் கலந்து கொண்டனர்.

முறையாக செயல்படும் விவசாயிகளுக்கு கடனுதவி செய்ய தயாராக இருக்கிறோம் பாரதியார் கிராம வங்கி தலைவர்....




பாகூர் அடுத்த குருவிநத்தம் கிராமத்தில் நபார்டு வங்கி மற்றும்  புதுவை பாரதியார் கிராம வங்கி ஆதரவுடன் உழவர் மன்றம் சார்பில் சுற்றுசூழல் பாதுகாப்பு இயக்கம் தொடக்க  நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்;ச்சிக்கு உழவர் மன்ற தலைவர் லட்சுமிநாராயணன் தலமை தாங்கினார். பாகூர் கிளை வங்;கி மேலாளர் ஆனந்தராஜன் முன்னிலை வகித்தார்.  செயலாளர் கெஜவர்தன் வரவேற்றார்.  சிறப்பு விருந்தினராக புதுவை பாரதியார் கிராம வங்கி மாநில தலைவர் மார்க்ரட் ரீட்டா, நபார்டு வங்கியின் உதவி பொதுமேலாளர் உமாகுருமூர்த்தி ஆகியோர்கலந்து கொண்டு விவசாயிகளுக்கு வழங்கப்படும்  திட்டங்களை பற்றி எடுத்து கூறினார். மெலும் உழவர் மன்றம் சார்பில் பிளாஸ்டிக் ஒழிக்கும் விதமாக சுற்றுசூழல்  விழிப்புணர்வு இயக்கம் முதல் முறையாக விவசாயிகள் தொடங்கப்பட்டதிற்கு பாராட்டினர்.   நிகழ்ச்சியில் பாரதியார் வங்கி தலைவர் மார்கரட்ரீட்டா பேசுகையில், குருவிநத்தம் உழவர் மன்றம் புதுச்சேரியிலே சிறப்பாக இயங்கி வருகிறது.  இதுபோன்று செயல்படும் விவசாயிகளுக்கு தேவையான கடனுதவி உடனுக்குடன் தங்கள் வங்கி வழங்கி வருகிறது. கிசான் கார்டு மூலம் பயிர்களுக்கு கடன் வழங்கப்படுகிறது. முறையாக கடன் செலுத்தும் விவசாயிகளுக்கு 7 சதவீத வட்டியில் 3 சதவீதம் தள்ளுபடி கிடைக்கும்.  முறையாக செயல்படும் விவசாயிகளுக்கு கடனுதவி செய்ய தயாராக இருக்கிறோம். கறவை மாடுகளுக்கான கடன் மானியத்துடன் வழங்கி வருகிறோம். உழவர் மன்றங்களுக்கு அறுவடை இயந்திரங்கள் வாங்க கடனுதவி வழங்க ஏற்பாடு செய்யபடும் என தெரிவித்தார்.  தொடர்ந்து உழவர் மன்றம் ஏற்பாடு செய்து இருந்த துணி பைகளை வீடு விடாக வழங்கப்பட்ட��

புதுச்சேரியில் முன்னாள் முதல்வரும் என் ஆர் காங்கிரஸ் கட்சி தலைவருமான ரங்கசாமி பிறந்த நாளையொட்டி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வைத்தியநாதன் சால்வை அணிவித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்



புதுச்சேரி கோரிமேடு பகுதியில் உள்ள அப்பா பைத்திய ஸ்வாமி ஆலயத்தில் முன்னாள் முதல்வர் ரங்கசாமி பிறந்த நாளை யொட்டி சிறப்பு பூஜை நடைபெற்றது.

இதில் முன்னால் முதல்வர் ரங்கசாமி கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தார். மேலும் இதில் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வைத்தியநாதன் உட்பட என் ஆர் காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

அதனை தொடர்ந்து முன்னாள் முதல்வர் ரங்கசாமியிக்கு சால்வை அணிவித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார் மேலும் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் முன்னாள் முதல்வர் ரங்கசாமியிக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு சமபந்தி விருந்து வழங்கப்பட்டது நிகழ்ச்சியில் என் ஆர் காங்கிரஸ் நிர்வாகிகள் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இதேபோல் அகில இந்திய என் ஆர் காங்கிரஸ் பேரியக்க நிறுவனத் தலைவரும் முன்னாள் முதல்வருமான  வாழும்
காமராஜர் ரங்கசாமி  ஐயா அவர்களின்   பிறந்தநாளை ஒட்டி அக்கட்சியின் தொண்டர்கள்.

புதுச்சேரி முழுவதும் பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் அன்னதானம் வழங்கி பிறந்த நாளை கொண்டாடினர் அதன் ஒரு பகுதியாக அரியாங்குப்பம் சட்டமன்ற தொகுதி என் ஆர் காங்கிரஸ் பிரமுகர் வெங்கடேசன் தலைமையில் 2000 பேருக்கு காலை சிற்றுண்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் என காங்கிரஸ் பிரமுகர்கள் மட்டும் இளைஞர்கள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு சிற்றுண்டி வழங்கி பிறந்த நாளை கொண்டாடினார்